Advertisement

வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி

By: Nagaraj Sun, 26 July 2020 10:48:07 AM

வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி

வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் நாட்டில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்ல என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், வடகொரியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

north korea,one person,corona impact,full curfew ,வடகொரியா, ஒருநபர், கொரோனா பாதிப்பு, முழு ஊரடங்கு

இந்நிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் கிம் ஜாங்க் உன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நாடு தழுவிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாகவும், கொரோனா தொற்று பரவால் தடுக்க கேஸாங் நகரில் முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் வடகொரிய மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. முக்கவசம் அணியாமல் வெளியே திரிபவர்களை கைது செய்து 3 மாதம் கடும் வேலை செய்யும் நூதன தண்டனையை அரசு அமுல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Tags :