Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுபானங்களுக்கு கொரோனா வரி ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிப்பு

மதுபானங்களுக்கு கொரோனா வரி ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிப்பு

By: Monisha Tue, 01 Dec 2020 5:06:17 PM

மதுபானங்களுக்கு கொரோனா வரி ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிப்பு

மதுபானங்களுக்கு கொரோனா வரி ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. பின்னர் மே 24-ந்தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க புதுவை அரசு அனுமதித்தது.

அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி காலம் முதலில் ஆகஸ்டு மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30-ந் தேதி வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த வரியை நீக்கக்கோரி கடந்த 29-ந் தேதி கோப்பு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை.

liquor,corona virus,liquor bars,excise,kiranbedi ,மதுபானம்,கொரோனா வைரஸ்,மதுபார்கள்,கலால் வரி,கிரண்பேடி

அதே நேரத்தில் கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார். அதன்படி இந்த உத்தரவு வரும் ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கவர்னர் கூறியதாவது:- கொரோனா தொற்றில் இருந்து புதுவை தற்போது மீண்டு வருகிறது. விரைவில் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகியவை தொடர்ந்து வருகிறது. அதனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு மீண்டும் இக்கோப்பை தாக்கல் செய்யலாம். அத்துடன் புதுவை அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவில் நிலவும் தொற்றின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கவர்னர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|