Advertisement

கொரோனா பரிசோதனையை 20 நிமிடத்தில் கண்டறியும் இயந்திரம்

By: Nagaraj Fri, 14 Aug 2020 7:24:33 PM

கொரோனா பரிசோதனையை 20 நிமிடத்தில் கண்டறியும் இயந்திரம்

20 நிமிடத்தில் துல்லியமாக கணக்கிடலாம்... மெல்போர்னில் கொரோனா பரிசோதனையை 20 நிமிடத்தில் 100 சதவீதம் துல்லியமாக கணக்கிடும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனார்.

இதுகுறித்து மெல்போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் ஸ்டீனியர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

என் 1-ஸ்டாப்-லாம்ப் எனப்படும் இந்த சோதனை, சார்ஸ்-கோவ்-2 மாதிரிகளைக் பரிசோதனை செய்வதில் 100 சதவீதம் துல்லியமாக உள்ளது. இந்த இயந்திரம் சிறிய சிறிய பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. கரோனா தொற்றைக் கண்டறிவதில் விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.

cost,corona,innovation,accuracy,quick ,செலவு, கொரோனா, கண்டுபிடிப்பு, துல்லியம், விரைவு

முன்பே பரிசோதித்த 151 மாதிரிகளை இந்த இயந்திரம் மூலம் மறுபரிசோதனைக்கு உட்படுத்தினோம். இதில், 87 மாதிரிகளை நேர்மறையென 100 சதவீதம் சரியாக அடையாளம் கண்டுள்ளது. இச்சோதனையில் 93 மாதிரிகளை 14 நிமிடங்களிலும், மீதமுள்ள மாதிரிகளை 20 நிமிடத்திற்கும் குறைவாகவும் முடிவுகளை தெரிவித்தது.

இந்த இயந்திரம் பராமரிப்பிற்கு மிகவும் எளிதாகவும், முடிவுகளை தெரிவிப்பதில் விரைவாகவும் உள்ளது. மேலும் பரிசோதனைக்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags :
|
|