Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 69 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் ஒரே நாளில் 69 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை

By: Monisha Thu, 13 Aug 2020 09:24:23 AM

தமிழகத்தில் ஒரே நாளில் 69 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாநிலத்தில் நேற்று 5 ஆயிரத்து 871 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 633 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 119 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,testing,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பரிசோதனை,சிகிச்சை

இதற்கிடையில், தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 10 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 575 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 32 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :