Advertisement

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கு கொரோனா பரிசோதனை

By: Karunakaran Fri, 09 Oct 2020 2:04:54 PM

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கு கொரோனா பரிசோதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டபின், கடந்த 2-ம் தேதி டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின், இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவில் இருந்து குணமடையாத போதும் தொடர்ந்து வெள்ளைமாளிகையில் டிரம்ப் தனது அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

corona test,us,vice president,mike pence ,கொரோனா சோதனை, அமெரிக்கா, துணைத் தலைவர், மைக் பென்ஸ்

இந்நிலையில் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் துணை அதிபர் பதவிக்கு டிரம்ப் கட்சி சார்பில் மைக் பென்ஸ், ஜோ பிடன் கட்சியில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், வேட்பாளர்களுக்கான நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது.

முன்னதாக இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் துணை அதிபர் மைக் பென்சுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளதாக வெள்ளைமாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags :
|