Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்

கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்

By: Monisha Wed, 26 Aug 2020 2:37:45 PM

கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்

கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்... சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கொரோனா பரிசோதனை முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கும் நடைமுறையை தொடங்கி வைத்தார். மேலும் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

corona virus,vulnerability,test results,sms,minister vijayabaskar ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பரிசோதனை முடிவு,எஸ்எம்எஸ்,அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா உயிரிழப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பாடகர் எஸ்.பி.பி., எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிக்சைக்கு தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|