Advertisement

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

By: Karunakaran Mon, 08 June 2020 3:26:11 PM

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,929 ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளது. இதனால் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

coronavirus virus,india,delhi cm,arvind kejriwal ,கொரோனா வைரஸ்,இந்தியா,டெல்லி முதல்வர்,அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்கிடையில் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் இன்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். கடந்த சில நாட்களில், முதல்வர் கெஜ்ரிவால் ஒரு சில கூட்டங்களில் கலந்து கொண்டு டெல்லி செயலகத்தையும் பார்வையிட்டார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரில் வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படும் எனவும், ஹோட்டல் மற்றும் விருந்து அரங்குகள் மூடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Tags :
|