Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் 4 ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை ஏற்றுக்கொள்ளப்படாது - துணைத் தூதரக அதிகாரி

இந்தியாவின் 4 ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை ஏற்றுக்கொள்ளப்படாது - துணைத் தூதரக அதிகாரி

By: Karunakaran Tue, 29 Sept 2020 2:30:16 PM

இந்தியாவின் 4 ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை ஏற்றுக்கொள்ளப்படாது - துணைத் தூதரக அதிகாரி

ஜெய்ப்பூரில் உள்ள சூர்யம் லேப், கேரளாவில் உள்ள மைக்ரோஹெல்த் லேப், டெல்லியில் உள்ள டாக்டர் பி பாசின் பாத்லேப்ஸ் லிமிடெட் மற்றும் நோபிள் டயோக்னோஸ்டிக் மையம் ஆகிய இடங்களில் கொரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டாம் என துபாய் துணைத் தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து துபாய் நகருக்கு விமானம் மூலம் வருபவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொண்டு துபாய் நகருக்கு வர வேண்டும். மேற்கண்ட 4 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து வரும் பயணிகள் துபாய் நகருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

corona test,4 laboratories,india,deputy consular officer ,கொரோனா சோதனை, 4 ஆய்வகங்கள், இந்தியா, துணை தூதரக அதிகாரி

எனவே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெற்ற மற்ற ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து தங்களது பயணத்தை தொடர பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஏர் இந்தியா நிறுவனமும் மேற்கண்ட 4 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து வரும் பயணிகள் துபாய் நகருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி பெற்ற மற்ற ஆய்வகங்களில் தங்களது பரிசோதனைகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பிளைதுபாய் விமான நிறுவனமும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|