Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரிசோதனை நடைமுறையில் மாற்றம் - ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு

கொரோனா பரிசோதனை நடைமுறையில் மாற்றம் - ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு

By: Monisha Tue, 19 May 2020 4:24:45 PM

கொரோனா பரிசோதனை நடைமுறையில் மாற்றம் - ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கொரோனா பாதிப்பு பரிசோதனை நடைமுறைகளை நேற்று மாற்றி அமைத்தது.

இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு தீவிர சுவாச தொற்றுடன், காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு அறிகுறி தோன்றிய 7 நாட்களுக்குள் ஆர்டி-பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும்.

அதுபோல், இந்த அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும். மேலும், நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்து, அறிகுறி எதுவும் இல்லாதவர்களுக்கு, தொடர்பு கொண்ட 5-வது நாளில் இருந்து 10-வது நாட்களுக்குள் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும்.

corona testing,indian medical research council,pcr. examination,coronavirus,rt-pcr. inspection ,கொரோனா பரிசோதனை,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,பி.சி.ஆர். பரிசோதனை,கொரோனா வைரஸ்,ஆர்டி-பி.சி.ஆர். பரிசோதனை

இன்னும் பரிசோதனை நடத்தாத நிலையில், அவசரகால சிகிச்சை நடைமுறைகள் தாமதம் ஆகக்கூடாது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நோய் பரவலை உறுதியாக கட்டுப்படுத்துவதும், நம்பகமான பரிசோதனை அளிப்பதும்தான் இதன் நோக்கம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களில் தீவிர சுவாச தொற்றுடன் அதிகமான காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கும், கடந்த 14 நாட்களில் சர்வதேச பயணம் மேற்கொண்டவர்கள், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :