Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62, 808 ஆக உயர்வு

கொரோனாவால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62, 808 ஆக உயர்வு

By: Nagaraj Sun, 10 May 2020 08:25:31 AM

கொரோனாவால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62, 808 ஆக உயர்வு

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவால் இந்தியாவில் இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 62,808 ஆக அதிகரித்துள்ளது. 2101 பேர் பலியாகி உள்ளனர். நேற்று இந்தியாவில் 2894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதித்தவர்களில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 19,301 ஆக உள்ளது. தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 41,402 பேராக உள்ளது.

corona,impact,india,rajasthan,delhi,tamil nadu ,கொரோனா, பாதிப்பு, இந்தியா, ராஜஸ்தான், டில்லி, தமிழகம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 1165 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,228 ஆகி அதிகரித்தது. இதேபோல் நேற்று 48 பேர் பலியாகி உள்ளளனர். 330 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தம் 3800 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குஜராத் மாநிலத்திலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்தது. இதனால் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,797 ஆகும். டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 224 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

corona,impact,india,rajasthan,delhi,tamil nadu ,கொரோனா, பாதிப்பு, இந்தியா, ராஜஸ்தான், டில்லி, தமிழகம்

இதனால் இங்கு 6,542 மொத்தமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2070 ஆகும். தமிழகத்தில் நேற்று 526 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,5235 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 44 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 219 பேர் குணமடைந்து மொத்தம் 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 129 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,708 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 106 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 181 பேர் குணமடைந்து மொத்தம் 2162 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags :
|
|
|
|