Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

By: Nagaraj Wed, 29 July 2020 4:16:01 PM

காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா; காவல் நிலையம் மூடப்பட்டது

காவல் நிலையம் மூடப்பட்டது... காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காவல் நிலையம் மூடப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 5,030 பேருக்குச் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 27-ம் தேதி எடுக்கப்பட்ட 161 மாதிரிகளுக்கான முடிவு இன்று (ஜூலை 29) கிடைக்கப் பெற்றது. அதில், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உட்பட 11 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோட்டுச்சேரி காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காவல் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தற்போது தற்காலிகமாக காவல் நிலையம் செயல்படுகிறது.

police station,examination,corona,vulnerability,assistant inspector of police ,
காவல்நிலையம், பரிசோதனை, கொரோனா, பாதிப்பு, காவல் உதவி ஆய்வாளர்

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ் கூறுகையில், "கொரோனா தொற்றுக்குள்ளான காவலருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் ஏதுமிருப்பின் உடனடியாக நலவழித்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவல் நிலையத்தில் பணியிலிருந்த அனைவருக்கும் 5 நாட்களுக்குப் பின்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

Tags :
|