Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

By: Nagaraj Sat, 31 Oct 2020 12:37:53 PM

கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

ஒரு லட்சம் பேர் பாதிப்பு... அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

usa,one lakh people,vulnerability,hospital,24 hours ,அமெரிக்கா, ஒரு லட்சம் பேர், பாதிப்பு, மருத்துவமனை, 24 மணிநேரம்

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 93இலட்சத்து 16ஆயிரத்து 297பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 35ஆயிரத்து 159பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 30இலட்சத்து 56ஆயிரத்து 626பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17ஆயிரத்து 150பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 60 இலட்சத்து 24ஆயிரத்து 512பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|