Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பல்பொருள் அங்காடி ஊழியருக்கு கொரோனா; வாடிக்கையாளர்கள் அச்சம்

பல்பொருள் அங்காடி ஊழியருக்கு கொரோனா; வாடிக்கையாளர்கள் அச்சம்

By: Nagaraj Mon, 06 July 2020 9:22:15 PM

பல்பொருள் அங்காடி ஊழியருக்கு கொரோனா; வாடிக்கையாளர்கள் அச்சம்

பிக்பஜார் அங்காடி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் பிக்பஜார் அங்காடி மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொருட்கள் வாங்கச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அருகே மாநகராட்சி சாலையில் பிக்பஜார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடி மற்றும் அதன் உள்ளே காம்பவுண்டிற்குள் ஏராளமான கடைகளும் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர். இங்கு ஏராளமானோர் வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் இந்த பல்பொருள் அங்காடியில் திருப்பூர் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த பெண் ஊழியருக்கு, உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்தார். பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

corona to employee,tirupur,supermarket,people fear,closure ,ஊழியருக்கு கொரோனா, திருப்பூர், பல்பொருள் அங்காடி, மக்கள் அச்சம், மூடல்

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டு அருகே உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்புகள் அமைத்தனர். மேலும், அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. இதற்கிடையே பெண் ஊழியர் பல்பொருள் அங்காடியில் பணியாற்றியதால் அந்த பல்பொருள் அங்காடியும் மூடப்பட்டது.

தொடர்ந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். மேலும், 2 வாகனங்களில் அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அந்த பல்பொருள் அங்காடி மற்றும் அதன் அருகே உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பெண் ஊழியரின் குடும்பத்தினர் என மொத்தம் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இத்தகவல் அறிந்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :