Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

By: Nagaraj Sun, 02 Aug 2020 6:33:45 PM

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை மீண்டும் நேர்மறையாக வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.

கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

corona,central interior,minister amit shah,hospital ,
கொரோனா, மத்திய உள்துறை, அமைச்சர் அமித்ஷா, மருத்துவமனை

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வர பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்ரமணியசுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில்,'கொரோனா தொற்று பாதிப்பால் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன். அவர் விரைவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆக பிரார்த்தனை செய்கிறேன் 'என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மற்ற நாடுகளை காட்டிலும் மின்னல் வேகத்தில் இருக்கிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. கொரோனா தொடர்பான பரிசோதனைகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியாவில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 17,50,724 ஆக அதிகரித்து உள்ளது.

Tags :
|