Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளருக்கும் கொரோனா

அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளருக்கும் கொரோனா

By: Karunakaran Tue, 06 Oct 2020 08:41:14 AM

அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளருக்கும் கொரோனா

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததால், வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது டிரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை சீரானதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டாலும் அதிபர் டிரம்ப் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

corona virus,white house spokesman,president trump,corona virus ,கொரோனா வைரஸ், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், ஜனாதிபதி டிரம்ப், கொரோனா வைரஸ்

இந்நிலையில் வெள்ளைமாளிகை ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் பணி செய்துவரும் அதிபர் டிரம்ப்பின் உதவியாளர் ஹோப் ஹூக்ஸ் என்பவருக்கே முதலில் கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து பலருக்கும் கொரோனா பரவி வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாகவே அதிபர் உள்பட பலருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளரான கெய்லீ மெக்கெனிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :