Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 3:05:33 PM

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் சில நாடுகளின் தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்து வினியோகிக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

corona vaccine,mandatory,corona virus,australian pm ,கொரோனா தடுப்பூசி, கட்டாயம், கொரோனா வைரஸ், ஆஸ்திரேலிய பிரதமர்

நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் கொரோனா தடுப்பூசி குறித்த தகவலை அறிவித்தார். மேலும், இந்த தடுப்பூசி முடிந்தவரை அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இந்த அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றார்.

இதுகுறித்து அவர் சிட்னி ரேடியோவுக்கு பேட்டி அளித்தபோது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்றும், இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

Tags :