Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்

பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்

By: Nagaraj Thu, 31 Dec 2020 1:20:01 PM

பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பல்வேறு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்க துணை அதிபர் கமலாஹாரிசும் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜப்பான், கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன் உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட வைரஸ், பிரிட்டனில் உருமாற்றமடைந்த வைரசுடன் தொடர்புடையது அல்ல என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை மாற்றமடைந்தததாக தெரிவித்துள்ளனர்.

இந்த உருமாற்றங்களினால் நோயாளிகளின் அறிகுறிகள், பாதிப்புகள் மாறுபடுவோ தீவிரமடையவோ இல்லை. இதனால் சிகிச்சை முறையில் மாற்றம் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியை உலக நாடுகள் தொடங்கியுள்ளன.

corona,vaccine,security guards,teachers ,கொரோனா, தடுப்பூசி, பாதுகாப்பு படையினர், ஆசிரியர்கள்

கோவிஷீல்ட் என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைசர் தடுப்பூசிக்கு ஏற்கெனவே பிரிட்டன் அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது 2வது தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், விஞ்ஞானிகளை தாம் நம்புவதாகவும், இந்த தடுப்பூசி குடும்ப உறுப்பினர்களை மட்டுமின்றி, சமூகத்தையும் காப்பாற்றும் என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைப்பிரிவினருக்கும் மாடர்னாவின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அர்ஜென்டினாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 3 லட்சம் டோஸ் மருந்தை ரஷ்யா கடந்த வாரம் அனுப்பி வைத்தது.

மருத்துவ பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், ஆசிரியர்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இதுவரை 5 லட்சம் பேரக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 5 லட்சமாவது தடுப்பூசியை பெறும் நபருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags :
|