Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் - அதிபர் டிரம்ப்

ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் - அதிபர் டிரம்ப்

By: Karunakaran Sat, 14 Nov 2020 5:15:00 PM

ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் - அதிபர் டிரம்ப்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இருப்பினும், ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்கும் வரை அமெரிக்க அதிபர் பதவியில் நீடிப்பார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, முன்னிலை பணியாளர்கள், வயது முதிர்ந்தோர் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வினியோகிக்கப்படும் என கூறினார்.

corona vaccine,americans,president trump,joe viden ,கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா, ஜனாதிபதி டிரம்ப், ஜோ பிடென்

அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து பிஜர், அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும். நம்முடைய முதலீடானது, பிஜர் தடுப்பு மருந்து கட்டணமின்றி இலவசம். ஆகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்று டிரம்ப் கூறினார்.

கடந்த 5ந்தேதி இறுதியாக பேசிய டிரம்ப், சட்டபூர்வ வாக்குகளை நீங்கள் எண்ணினால் நான் எளிதில் வெற்றி பெறுவேன். சட்டவிரோத வாக்குகளை நீங்கள் எண்ணினால் நம்மிடம் இருந்து அவர்கள் தேர்தல் முடிவுகளை திருட முயற்சித்திடுவார்கள் என தெரிவித்தார்.

Tags :