Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாம் ...17½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாம் ...17½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

By: vaithegi Mon, 11 July 2022 07:36:02 AM

தமிழகத்தில்  நேற்று நடந்த சிறப்பு முகாம் ...17½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில் நேற்று 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் சென்னையில் மட்டும் 200 வார்டுகளுக்கு 1,600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 10 லட்சத்து 88 ஆயிரத்து 865 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி 3 லட்சத்து 13 ஆயிரத்து 499 பேருக்கும் செலுத்தப்பட்டது.

corona,vaccine,corona vaccine ,கொரோனா, தடுப்பூசி

மேலும் தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 1-வது தவணையாக 95.23 சதவீதமும், 2-வது தவணையாக 87.25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 1-வது தவணையாக 18 லட்சத்து 94 ஆயிரத்து 484 பேருக்கும், 2-வது தவணையாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 217 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேருக்கும், 2-வது தவணையாக 25 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 18 லட்சத்து 5 ஆயிரத்து 929 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 4 கோடியே 61 லட்சத்து 55 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :
|