Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி...இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம்

இந்தியாவில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி...இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம்

By: vaithegi Wed, 29 June 2022 5:06:16 PM

இந்தியாவில் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி...இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம்

இந்தியா: இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டது.

ஆனால் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி குறித்து எந்த அறிவிப்பும் முன்னதாக வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது 7 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால சிகிச்சைக்காக செலுத்தலாம் என நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்தனர்.

corona,vaccine ,கொரோனா ,தடுப்பூசி

இதையடுத்து, சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசியை 7 – 11 வயதினருக்கு செலுத்த அனுமதி அளிக்குமாறு, அந்நிறுவனம் சார்பில் இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது அதற்கு இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து பரீசீலணை செய்த நிலையில் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்க இந்திய மருத்துவ கட்டுபாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|