Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்; ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்; ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

By: Monisha Thu, 20 Aug 2020 09:56:16 AM

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்; ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுபற்றி ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று கூறியதாவது:- "ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும்.

corona virus,vaccine,australia,free,pm scott morrison ,கொரோனா வைரஸ்,தடுப்பூசி,ஆஸ்திரேலியா,இலவசம்,பிரதமர் ஸ்காட் மோரீசன்

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்" என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்காக ஆஸ்திரேலியா போட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|