Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைப்பு

சீனாவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைப்பு

By: Karunakaran Tue, 08 Sept 2020 09:07:55 AM

சீனாவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைப்பு

கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அதன்பின் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளன.

இந்நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அப்போது அந்நாட்டின் இரு நிறுவனங்களான சினோவக் பயோடெக் மற்றும் சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் இவை காட்சி படுத்தப்பட்டுள்ளது.

corona vaccine,trade fair,china,corona virus ,கொரோனா தடுப்பூசி, வர்த்தக கண்காட்சி, சீனா, கொரோனா வைரஸ்

பயோடெக் மற்றும் சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் விதத்தில் தொழிற்சாலையை கட்டி முடித்துள்ளதாக சினோவக் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில் நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா தோன்றி 8 மாதங்கள் கடந்த நிலையிலும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.


Tags :
|