Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

By: Karunakaran Wed, 15 July 2020 09:36:38 AM

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் - டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகமெங்கும் 1.35 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகப்படியாக 33.64 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா குறைந்த போது, கட்டுப்பாடுகளை தளர்த்தி தளர்வுகளை பல மாகாணங்களும் அறிவித்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு நாடு ஒருபோதும் முழுமையாக மூடப்படாததே காரணம் என அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.

trump,america,corona vaccine,corona virus ,டிரம்ப், அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

மேலும் அவர், கொரோனா வைரஸ் நோயின் முடிவைக்கூட அமெரிக்கா காணத்தொடங்கவில்லை. இதற்கு சாத்தியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. எப்படியும் பாதுகாப்பான ஒரு தடுப்பூசியை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கி விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம் என்று தெரிவித்ததாக சிஎன்பிசி டெலிவிஷன் சேனல் தெரிவித்துள்ளது.

Tags :
|