Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

By: Karunakaran Thu, 20 Aug 2020 2:49:10 PM

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் - ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

corona vaccine,free charge,australia,scot marison ,கொரோனா தடுப்பூசி, இலவச கட்டணம், ஆஸ்திரேலியா, ஸ்காட் மரிசன்

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறுகையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கூறியுள்ளார்.


Tags :