Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை; ரஷ்ய பிரதமர் தகவல்

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை; ரஷ்ய பிரதமர் தகவல்

By: Nagaraj Fri, 24 July 2020 1:49:49 PM

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை; ரஷ்ய பிரதமர் தகவல்

பாதுகாப்பானவை என நிரூபணம்... ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பது பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது என பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது:

ரஷ்யாவில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

russia,vaccine,corona,experiments,safe ,ரஷ்யா, தடுப்பூசி, கொரோனா, பரிசோதனைகள், பாதுகாப்பானவை

ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்புக் குழுவான ரோஸ்போட்ரெப் நாட்ஸரின் தகவல்படி 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகி உள்ளது. இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இரண்டு தடுப்பூசிகளின் பரிசோதனைகள் விரைவில் தொடங்கும் என்றார். கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிய பல நாடுகளிலும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|