Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 12 June 2020 11:18:42 AM

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் உயிரிழந்தனர்.உலகம் முழுவதும் 73 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பிரபலங்கள், உயரதிகாரிகள், தலைவர்கள் என பலரையும் தாக்கி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தற்போது 68 வயதாகிறது. நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் தலைவராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

nawaz sharif,pakistan,coronavirus,shebaz sharif ,நவாஸ் ஷெரீப்,ஷெபாஸ் ஷெரீப்,கொரோனா,பாகிஸ்தான்

தற்போது ஷெபாஸ் ஷெரீப் வீட்டிலே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே இதே கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷாகித் காகன் அப்பாசிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கட்சியின் பஞ்சாப் மாகாண எம்.எல்.ஏ. சவுத்ரி அலி அக்தர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :