Advertisement

இந்தோனேசியாவில் 2,429 பேர் கொரோனாவுக்கு பலி

By: Monisha Sat, 20 June 2020 5:19:27 PM

இந்தோனேசியாவில் 2,429 பேர் கொரோனாவுக்கு பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்தது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் புதிதாக 1,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,226 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கு கொரோனா பாதிப்பு எண்ணிகை 45,029 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 56 பேர் பலியான நிலையில் இதுவரை இந்தோனேசியாவில் 2,429 பேர் கொரோனாவுக்கு பலியாயுள்ளனர். இவ்வாறு கூறினர்.

indonesia,coronavirus,infected,killed ,இந்தோனேசியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி

கிழக்கு ஆசிய நாடுகளிலே இந்தோனேசியாவில்தான் சீனாவுக்கு அடுத்து அதிகப்படியான உயிரிழப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உள்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகினர். எனவே அவசரத் தேவைகளைக் கணக்கில்கொண்டு போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இந்தோனேசிய அரசு கடந்த மாதம் தளர்த்தியது. மேலும், அங்கு விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Tags :