Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,530 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,530 ஆக உயர்வு

By: Monisha Fri, 11 Sept 2020 11:05:32 AM

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,530 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 92 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 14,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 5,216 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 12,790 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 39 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 289 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

virudhunagar district,corona virus,infection,death,treatment ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,530 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 2,967 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 5,214 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படாதநிலை உள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுவது தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் கிராமப்பகுதிகளில் நோய்பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ பரிசோதனைகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|