Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்.. ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது..

இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்.. ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது..

By: Monisha Thu, 14 July 2022 8:03:09 PM

இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம்.. ஒருநாள் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 199.27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று 16,906 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

corona,virus,cases,vaccination , கொரோனா,பாதிப்பு, பரவல்,மக்கள்,

இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரத்து 989 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.அதன்படி, ஜூலை 15ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags :
|
|
|