Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் 2½ லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

கர்நாடகத்தில் 2½ லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

By: Monisha Thu, 20 Aug 2020 11:14:28 AM

கர்நாடகத்தில் 2½ லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2½ லட்சத்தை தொட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் கொரோனாவுக்கு 126 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாநிலத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 948 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று புதிதாக 8,642 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது.

karnataka,corona virus,infection,death,treatment ,கர்நாடகம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

நேற்று முன்தினம் வரை கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 4,217 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று ஒரேநாளில் 126 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி உள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பில், கொரோனா வைரஸ் உருவான சீனா நாட்டை கர்நாடக மாநிலம் நெருங்கி உள்ளது.

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் இதுவரை 96 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 1,558 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரத்து 201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 64 ஆயிரத்து 150 பேர் குணமடைந்து உள்ளனர். 81 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|