Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரிப்பு

By: Karunakaran Wed, 10 June 2020 11:50:49 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.76 லட்சமாக அதிகரிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் மற்ற நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைவாகவே இருந்தது. ஆனால் அதன்பின் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் ஆறுதலடைந்துள்ளனர்.

நாட்டிலே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் 90787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

corona virus,india,maharstra,tamilnadu ,இந்தியா,கொரோனா, மகாராஷ்டிரா ,தமிழ்நாடு

தற்போது, இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இந்தியாவில் மொத்தம் 276583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு எண்ணிக்கை 276583 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 279 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை 135206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக இருந்தாலும், குணமடையும் விகிதம் 48.8 சதவீதமாக உள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 5991 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 34914 பேருக்கும், டெல்லியில் 31309 பேருக்கும், குஜராத்தில் 21014 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|