Advertisement

இந்தியாவில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு

By: Nagaraj Mon, 03 Oct 2022 09:58:16 AM

இந்தியாவில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தற்போது குறைந்து வருவதாக தகவல் தெரிகிறது இந்தியாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 3,805 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில் புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது.

health ministry,recovery,report,statistics,virus ,கொரோனா, தடுப்பூசி, தொற்று பாதிப்பு, விகிதம், வைரஸ்

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,673-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது வரை 37,444- பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 219 கோடியை நெருங்கியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்ட புள்ளி விவரங்கள். அதே சமயம் மக்கள் சற்று பயந்துபோய் உள்ளனர்.

Tags :
|