Advertisement

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

By: vaithegi Tue, 18 Oct 2022 07:50:49 AM

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பலவேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதனை அடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 1 லட்சத்து 7 ஆயிரத்து 990 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 60 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரத்து 671 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 65 லட்சத்து 72 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|