Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை - சுகாதாரத்துறை தகவல்

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை - சுகாதாரத்துறை தகவல்

By: Monisha Sun, 15 Nov 2020 5:25:21 PM

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை - சுகாதாரத்துறை தகவல்

தீபாவளி மக்கள் கூட்டத்தால் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகவில்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பண்டிகை காலங்களுக்கு பிறகு கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும் என்று சுகாதாரத்துறை அச்சப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீபாவளி மக்கள் கூட்டத்தால் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 70 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,912 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தநிலையில் தற்போது கொரோனா குறைந்துள்ளது ஆறுதலாக உள்ளது.

diwali festival,corona virus,infection,crowd,health ,தீபாவளி பண்டிகை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,மக்கள் கூட்டம்,சுகாதாரத்துறை

இறப்பு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் கடந்த 13-ந் தேதி 14 பேர் மரணமடைந்திருந்த நிலையில், தற்போது 12 பேர் தான் மரணமடைந்துள்ளனர். இதில் சென்னையில் 4 பேர், கிருஷ்ணகிரியில் 2 பேர், கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 2 ஆயிரத்து 494 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 509 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது 17 ஆயிரத்து 748 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்னும் 2 நாட்கள் நடைபெறும் பரிசோதனையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவில்லை என்று தெரிந்தால், கொரோனா வேகமாக குறைந்துவிட்டது என்ற முடிவுக்கு வர முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
|