Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜுன் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டும்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

ஜுன் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டும்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

By: Nagaraj Wed, 10 June 2020 7:56:14 PM

ஜுன் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை எட்டும்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

ஜூன் மாத இறுதியில் டில்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நேற்று துணை முதல்வர் ஜுலை இறுதிக்குள் பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்று வெளியாகியுள்ளது. எனக்காக பிரார்த்தித்த, எனது உடல் நலம் தேற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

corona,politics,cm,explore,playground ,கொரோனா, அரசியல், முதல்வர், ஆராயப்படும், விளையாட்டரங்கம்

டில்லியில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டும் அபாயம் உள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிவது போல, ஒற்றை - இரட்டை இலக்க எண்களின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும் கரோனாவில் இருந்து காக்க உதவும்.

தனியார் மற்றும் டில்லி அரசு மருத்துவமனைகளில் டில்லிவாசிகளுக்கு மட்டுமல்லாமல், பிற மாநில மக்களுக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவோம்.

corona,politics,cm,explore,playground ,கொரோனா, அரசியல், முதல்வர், ஆராயப்படும், விளையாட்டரங்கம்

ஜூலை 31ம் தேதி வாக்கில், டில்லியில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் சுமார் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். நாளை அல்லது நாளை மறுநாள் முதல், நான் நேரடியாக களத்தில் இறங்கி, கொரோனா சிகிச்சை தொடர்பான சூழ்நிலைகளை ஆய்வு செய்ய உள்ளேன். விளையாட்டரங்கம் போன்றவற்றை கொரோனா வார்டுகளாக மாற்றுவது பற்றி ஆராயப்படும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கொரோனாவுக்கு எதிரானப் போரை எதிர்கொள்ள வேண்டும். இதர மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் டில்லிக்கு சிகிச்சைக்காக வந்தால், ஜூலை 31-ம் தேதியளவில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் 1.5 படுக்கை வசதிகள் தேவைப்படும். அரசியல் செய்ய இது நேரமல்ல, அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|