Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரபிரதேசத்தில் மற்றொரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

உத்தரபிரதேசத்தில் மற்றொரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Tue, 18 Aug 2020 4:16:24 PM

உத்தரபிரதேசத்தில் மற்றொரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அதுல் கார்க்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வரிசையில் உத்தரப் பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அதுல் கார்க்கும் இணைந்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அதுல் கார்க், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா இல்லை என காட்டியது. ஆனால் நேற்றிரவு 9 மணிக்கு மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

uttar pradesh,minister,corona. vulnerability,twitter ,உத்தரபிரதேசம், அமைச்சர், கொரோனா. பாதிப்பு, டுவிட்டர்

எனவே ஆகஸ்ட் 16 முதல் 18 வரை என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவொரு உதவிக்கும், நீங்கள் என்னுடன் அல்லது அதிகாரிகள் ராஜேந்திராஜி, அஜய் ராஜ்புத் ஆகியோருக்கும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் ஜெய் பிரதாப் சிங், ராஜேந்திர பிரதாப் சிங் (ஊரக வளர்ச்சி), பிரஜேஷ் பதக் (சட்டம்), மஹேந்திர சிங் (நீர்வளம்), தரம் சிங் சைனி (ஆயுஷ்), உபேந்திர திவாரி (விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்) ஆகிய அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி வருண் மற்றும் மக்கள் நலவாழ்வுதுறை அமைச்சர் சேத்தன் சவுகான் என இரண்டு அமைச்சர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உத்தரப்பிரதேசத்தில் 9 அமைச்சர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :