Advertisement

பொலிவியா அதிபர் ஜினைன் அனேசுக்கும் கொரோனா பாதிப்பு

By: Nagaraj Fri, 10 July 2020 8:00:11 PM

பொலிவியா அதிபர் ஜினைன் அனேசுக்கும் கொரோனா பாதிப்பு

பொலிவியா அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கும் அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற நாடுகளை போல, பொலிவியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மே மாதம் நடக்கவேண்டிய அதிபர் தேர்தலும் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், அதிபர் ஜினைன் அனேசுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

bolivian president,corona,ministers,vulnerability ,பொலிவியா அதிபர், கொரோனா, அமைச்சர்கள், பாதிப்பு

கொரொனா தொற்று இருப்பதை டுவிட்டரில் அறிவித்த அவர் தான் நலமுடன் உள்ளதாகவும், வீட்டில் இருந்தபடியே பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிவியாவில் சுகாதார அமைச்சர் உள்பட 7 அமைச்சர்களுக்கு கொரோனா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|