Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மைசூரு அரண்மனையில் வளர்க்கப்படும் ஒட்டகத்தின் பராமரிப்பாளர் மகனுக்கு கொரோனா பாதிப்பு

மைசூரு அரண்மனையில் வளர்க்கப்படும் ஒட்டகத்தின் பராமரிப்பாளர் மகனுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Sat, 11 July 2020 6:40:37 PM

மைசூரு அரண்மனையில் வளர்க்கப்படும் ஒட்டகத்தின் பராமரிப்பாளர் மகனுக்கு கொரோனா பாதிப்பு

மைசூரு டவுனில் பிரசித்தி பெற்ற மைசூரு அரண்மனை உள்ளது. இது சுற்றுலா நகரமாக அமைந்துள்ளது. யானை, ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகள் உள்ளன. இவை அரண்மனையின் பின்புற மண்டபத்தின் அருகில் தங்கியிருந்து வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒட்டக பராமரிப்பாளரின் மகன் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மைசூரு அரண்மனை முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டக பராமரிப்பாளரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு அறியப்பட்டதால், நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை 3 நாட்கள் மைசூரு அரண்மனை மூடப்படுவதாக அரண்மனை வாரிய துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

mysuru palace,corona vulnerability,camel caregiver,corona virus ,மைசூர் அரண்மனை, கொரோனா பாதிப்பு, ஒட்டக பராமரிப்பாளர், கொரோனா வைரஸ்

மேலும் இதுகுறித்து அரண்மனை வாரிய துணை இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில், ஒட்டகத்தை பராமரிப்பவரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மைசூரு அரண்மனை 3 நாட்கள் மூடப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாகரஒலே, பந்திப்பூர் வனச்சரணாலயங்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது.

Tags :