Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 02 Oct 2020 2:28:55 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை நடந்த பிரச்சார பேரணியின்போது டிரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். இந்நிலையில் ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

corona vulnerability,us president,trump,melania trump ,கொரோனா பாதிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப்

ஹோப் ஹிக்சுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த டிரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.

தற்போது, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதுகுறித்த தகவலை அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags :
|