Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் மறுபடியும் தீவிரம் எடுக்கும் கொரோனா…. இன்று 200 பேருக்கு தோற்று உறுதி

இந்தியாவில் மறுபடியும் தீவிரம் எடுக்கும் கொரோனா…. இன்று 200 பேருக்கு தோற்று உறுதி

By: vaithegi Mon, 13 June 2022 10:20:00 PM

இந்தியாவில் மறுபடியும் தீவிரம் எடுக்கும் கொரோனா…. இன்று 200 பேருக்கு தோற்று உறுதி

இந்தியா: இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் இந்தியாவில் 4ம் அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதே போலவே தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

corona,india,corona prevention ,கொரோனா, இந்தியா,கொரோனா தடுப்பு

இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது மறுபடியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,32,22,017 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தினசரி பாதிப்பு 8,329 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் 200 பேருக்கு கூடுதலாக உறுதி செய்யப்பட்டு 8,582 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு அமல்படுத்த படும் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|