Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா 2 வருடத்தில் நிறைவடையும்; உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

கொரோனா 2 வருடத்தில் நிறைவடையும்; உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

By: Nagaraj Sat, 22 Aug 2020 12:04:16 PM

கொரோனா 2 வருடத்தில் நிறைவடையும்; உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்... கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இரண்டு வருடங்களில் முடிவடையும் என நம்புவதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1918ல் பரவிய ஸ்பானிஷ் ப்ளூ இரண்டு வருடங்களில் முடிவடைந்ததாகவும், அதை காட்டிலும் விரைவாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் எனவும் குறிப்பிட்டார்.

corona,2 years,threat,geneva ,கொரோனா, 2 ஆண்டுகள், அச்சுறுத்தல், ஜெனிவா

தற்போதுள்ள, அதிகப்படியான தொழில்நுட்பம் மற்றும் தொடர்புகள் காரணமாக, கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேசமயம், வைரஸை கட்டுப்படுத்துவதற்கான அறிவும், தொழில்நுட்பமும் கூட நம்மிடம் உள்ளதாக டெட்ரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags :
|
|