Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்தது!

வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்தது!

By: Monisha Sat, 06 June 2020 3:35:45 PM

வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்தது!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 67.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தக் கொடிய வைரசுக்கு இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

coronavirus,bangladesh,impact number,death toll ,வங்காளதேசம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 2828 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 60,391 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 30 பேர் பலியானததை தொடர்ந்து, அங்கு 811 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :