Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசில் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது

பிரேசில் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது

By: Karunakaran Sat, 20 June 2020 11:40:30 AM

பிரேசில் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் இதற்கு தாதுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 87 லட்சத்து 50 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 68 ஆயிரத்து 686 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 54 ஆயிரத்து 791 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

brazil,coronavirus,corona death,america , பிரேசில்,கொரோனா பலி,கொரோனா வைரஸ்,அமெரிக்கா

உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 46 லட்சம் 20 ஆயிரத்து 378 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 818 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் பிரேசில் நாடு உள்ளது.

பிரேசில் நாட்டில் தற்போதுவரை, 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் கொரோனா பீதியில் உள்ளனர்.


Tags :
|