Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 239 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 239 ஆக அதிகரிப்பு

By: Monisha Tue, 09 June 2020 10:19:24 AM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 239 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 29 ஆயிரத்து 215 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகம் நோய்த்தொற்றில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் முதன்முறையாக 1500-ஐ தாண்டியது.

நேற்றும் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,239 ஆக அதிகரித்துள்ளது.

india,coronavirus,tamil nadu,chennai,chengalpattu ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சென்னை,செங்கல்பட்டு

தமிழக்தில் நேற்று 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதம் மூலம் 17,527 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட அளவில் முதல் பத்து இடங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:
சென்னை - 23,298

செங்கல்பட்டு - 1,988

திருவள்ளூர் - 1,386

காஞ்சிபுரம் - 534

திருவண்ணாமலை - 503

கடலூர் - 491

திருநெல்வேலி - 390

விழுப்புரம் - 384

அரியலூர் - 381

தூத்துக்குடி - 355

Tags :
|