Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 18 June 2020 1:07:16 PM

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், மேலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் மருத்துவர்கள்,சுகாதார பணியாளர்கள் என அனைவரையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மஹாராஷ்டிராவும், இரண்டாவதாக தமிழகமும், அடுத்த இடத்தில் டெல்லியும் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

satyendra jain,coronavirus,health minister,manish sisodia ,சுகாதாரத்துறை மந்திரி,சத்யேந்திர ஜெயின்,மணீஷ் சிசோடியா,கொரோனா பாதிப்பு

நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதால், சத்யேந்திர ஜெயின் உடனே ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறை பொறுப்புகளும் மணீஷ் சிசோடியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :