Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜபர் மிர்சாவுக்கு கொரோனா பாதிப்பு

பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜபர் மிர்சாவுக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Tue, 07 July 2020 09:16:58 AM

பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜபர் மிர்சாவுக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தானில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 4 ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தானிலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

jafar mirza,pakistan,health minister,corona infection ,பாகிஸ்தான்,ஜாபர் மிர்சா, சுகாதார அமைச்சர், கொரோனா தொற்று

தற்போது பாகிஸ்தானின் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை மந்திரியான ஜபர் மிர்சா தனக்கு கொரோனா இருப்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், எனக்கு சிறிய அளவிலான அறிகுறிகள் உள்ளது. இதனால் தான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அங்குள்ள மக்கள் கொரோனா பீதியில் உள்ளனர். சுகாதாரத்துறை மந்திரிக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

Tags :