Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்

பிரிட்டனில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்

By: Monisha Tue, 16 June 2020 5:14:34 PM

பிரிட்டனில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச அளவில் செயல்படும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் பிரிட்டனில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தைக் கடந்திருக்கலாம் கூறியுள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் கூறிஉள்ளதாவது:-

britain,coronavirus,england,ireland,scotland ,பிரிட்டன்,கொரோனா வைரஸ்,இங்கிலாந்து,அயர்லாந்து,ஸ்காட்லாந்து

கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. பிரிட்டனில் மட்டும் சுமார் 53,077 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். இதில் சந்தேகத்துக்குரிய மரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்த இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆனால், பிரிட்டன் அரசு இதுவரை கொரோனாவால் 41,736 பேர் பலியாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இதுவரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 857 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :