Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Tue, 30 June 2020 11:55:54 AM

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

coronavirus,america,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், அமெரிக்கா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.28 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது அங்கு கொரோனா தாக்கம் பலமடங்கு அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.81 லட்சத்தைத் தாண்டியது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11.06 லட்சத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் கொரோனா காரணமாக 1.28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :