தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரிப்பு
By: Monisha Mon, 22 June 2020 09:53:35 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை:-
சென்னை - 601
செங்கல்பட்டு - 49
திருவள்ளூர் - 37
விழுப்புரம் - 10
காஞ்சிபுரம் - 10
மதுரை - 8
திருவண்ணாமலை - 7
திண்டுக்கல் - 4
திருநெல்வேலி - 4
தூத்துக்குடி - 3
கடலூர் - 3
வேலூர் - 3
கிருஷ்ணகிரி - 2
ராமநாதபுரம் - 2
ராணிப்பேட்டை - 2
தேனி - 2
கோவை - 1
ஈரோடு - 1
கன்னியாகுமரி - 1
நாமக்கல் - 1
புதுக்கோட்டை - 1
சிவகங்கை - 1
தஞ்சாவூர் - 1
திருச்சி - 1
விருதுநகர் - 1