Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்தியா வலியுறுத்தல்

By: Nagaraj Tue, 23 June 2020 10:51:26 PM

பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்தியா வலியுறுத்தல்

தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தல்... இந்தியாவில் பணியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை 50% ஆக குறைக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே ராணுவ அளவிலான மோதல்கள் மட்டுமின்றி அரசு ரீதியாகவும் மோதல்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்த அபித் ஹூசைன், முகமது தாஹிர் ஆகிய இரு அதிகாரிகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து இரண்டு அதிகாரிகளும் இந்தியாவால் வரவேற்கப்படாத நபர்களாக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

embassy,​​pakistan,staff,to cut,india ,தூதரகம், பாகிஸ்தான், ஊழியர்கள், குறைக்க வேண்டும், இந்தியா

மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளை துன்புறுத்தியதாக கூறப்பட்டது. மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு மோசமான முறையில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்ட இரண்டு பேர் உட்பட 5 இந்திய அதிகாரிகள் நேற்று இந்தியா திரும்பினர். மேலும் பாகிஸ்தானியர்களால் மோசமான முறையில் நடத்தப்பட்டது தொடர்பான கிராஃபிக் விவரங்களையும் மத்திய வெளியுறவுத்துறையிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

embassy,​​pakistan,staff,to cut,india ,தூதரகம், பாகிஸ்தான், ஊழியர்கள், குறைக்க வேண்டும், இந்தியா

இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் தூரகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அதே அளவில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் குறைக்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளதாகவும் இது தொடர்பாக பாகிஸ்தானின் செயல் உயர் அதிகாரி சையத் ஹைதர் ஷாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|
|